பயன்பாட்டு விதிமுறைகள்
கடைசியாகப் புதுப்பித்தது 13 நவம்பர் 2026
- BizBot என்பது MV Inc நிறுவனத்தின் சேவை. இதைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த விதிமுறைகளை ஏற்கிறீர்கள்.
- நீங்கள் இணைக்கும் ஒவ்வொரு Google லிஸ்டிங்கும் உங்களுடையதாக இருக்க வேண்டும், அல்லது அதை நிர்வகிக்க உங்களுக்கு அனுமதி இருக்க வேண்டும்.
- BizBot உங்கள் பெயரில் பதில்களும் போஸ்ட்களும் போடும். ஆட்டோ-ரிப்ளையை OFF செய்யலாம், அது போட்ட எதையும் மாற்றலாம் அல்லது நீக்கலாம்.
- போலி ரிவ்யூ போட, ரிவ்யூக்கு பரிசு தர, அல்லது திருப்தியான வாடிக்கையாளர்களிடம் மட்டும் ரிவ்யூ கேட்க BizBot-ஐப் பயன்படுத்த மாட்டீர்கள். அப்படிச் செய்யும் லிஸ்டிங்குகளை Google சஸ்பெண்ட் செய்யலாம்; அத்தகைய கணக்குகளை நாங்கள் மூடலாம்.
- Maps-ல் எது காட்டப்படும் என்பதை Google தான் முடிவு செய்யும். ரேங்க் தருவோம் என்று நாங்கள் உறுதி தர முடியாது; Google தன் சேவைகளை மாற்றலாம் அல்லது நிறுத்தலாம்.
- பிளான் கட்டணம் முன்கூட்டியே செலுத்த வேண்டும், திருப்பித் தரப்படாது. எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்; பிளான் அதன் கடைசி தேதி வரை ஓடும். விலைகளுடன் GST தனி.
- எங்கள் பொறுப்பு, கடந்த மூன்று மாதங்களில் நீங்கள் எங்களுக்குச் செலுத்திய தொகை வரை மட்டுமே.
- தமிழ்நாடு, திருவாரூர் நீதிமன்றங்களுக்கே அதிகார வரம்பு உண்டு.